மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சனிக் கிரக மேய்ச்சலுக்கு தயாராகும் 'காசினி' விண்கலம்!

சனிக் கிரகத்தின் துணைக்கோள்கள் மற்றும் அதன் வளையங்கள் குறித்து ஆராய ஏவப்பட்ட  'காசினி' விண்கலமானது, தற்போது 'சனிக்கிரக மேய்ச்சலுக்கு ' தயாராகி வருகிறது. 

News image
Updated On :1 டிசம்பர் 2016, 6:13 am

வாஷிங்டன்: சனிக் கிரகத்தின் துணைக்கோள்கள் மற்றும் அதன் வளையங்கள் குறித்து ஆராய ஏவப்பட்ட  'காசினி' விண்கலமானது, தற்போது 'சனிக்கிரக மேய்ச்சலுக்கு ' தயாராகி வருகிறது. 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சனிக் கிரகத்தின் துணைக்கோள்கள் மற்றும் அதன் வளையங்கள் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு, 1997-ஆம் ஆண்டு வாக்கில் 'காசினி' என்னும் விண்கலத்தை ஏவியது.

தனது 19 வருட சேவையின் இறுதி கட்டமாக, சனிக்கிரகத்தின் துருவப்பகுதிகளின் மேலே மற்றும் கீழ் பகுதிகளில்  சுற்றி வரும் செயல்பாட்டினை காசினி தற்பொழுது மேற்கொள்ள உள்ளது.  அடுத்து வரும் ஐந்து மாதங்களுக்கு, வாரத்திற்கு ஒரு முறை என்ற கணக்கில், 20 முறை காசினி இந்த பயனத்தை மேற்கொள்ள உள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இது குறித்து காசினி திட்ட குழுவிவின் தலைமை விஞ்ஞானி லிண்டா ஸ்பீல்க்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிரகத்தின் வளையங்களின் வெளிப்பகுதிகளை மிகவும் நெருக்கத்தில் கடக்கவுள்ளதால் இந்த செயல்பாடானது, காசினி மேற்கொள்ளும்  ‘சனிக்கிரக வளைய மேய்ச்சல்' என்று அழைக்கப்படுவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.