வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

இந்தோனேசியாவில் விமான விபத்து: போலீசார் 16 பேர் பலி!

காவல்துறை அதிகாரிகள்  பயணம் செய்த விமானம் ஒன்று, இந்தோனேசியாவின் பேட்மேன் தீவுக்கூட்டத்தின்மேல் பறந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானதில்...

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:51 pm

ஜகார்த்தா: காவல்துறை அதிகாரிகள்  பயணம் செய்த விமானம் ஒன்று, இந்தோனேசியாவின் பேட்மேன் தீவுக்கூட்டத்தின்மேல் பறந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த 16 பேரும் பலியாகினர்.

இந்தோனேசியாவின் கேபுலாவுவான் ரிய மாகாணத்தில் உள்ள பங்கல் பினான்கிலில் இருந்து, இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான 'எம் 28 ஸ்கைட்ரக்' விமானம் ஒன்று இன்று காலை 16 காவல்துறை அதிகாரிகளுடன் பேட்மேன் தீவுக்கு கூட்டம் நோக்கி புறப்பட்டது.

சரியாக பேட்மேன் தீவுக்கூட்டத்தின் மேல் பறந்து கொண்டிருந்த பொழுது, விமானத்திற்கு தகவல் கட்டுப்பாட்டு தொடர்பு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.   அதன் பின்னர் நண்பகல் 12.20 மணி அளவில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் பேட்மேன் தீவுக்கூட்டத்தின் கடலில் தென்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல்களை தேசிய தேடுதல் மற்றும் மீட்பு துறை செய்தித்தொடர்பாளர் மர்சூடி தெரிவித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.