வெலிங்டன்: குடுமபத்தினருடன் போதுமான நேரம் செலவிட முடியாத அளவுக்கு பணிச்சுமைகள் இருப்பதால் பிரதமர் பதவியையும்,கட்சித்தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்வதற்காக நியூசிலாந்து பிரதமர் ஜான் கே அதிரடியாக அறிவித்துள்ளார்.
முக்கிய விஷயங்களை அறிவிப்பு செய்வதாக கூறி நியூசிலாந்து பிரதமர் ஜான் கே இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றைநடத்தினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் போதுமான அளவு நேரம் செலவிட முடியாத அளவு பணிச்சுமைகள் இருப்பதால் பிரதமர் பதவியையும், தேசியக் கட்சித் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். நான் எடுத்த முடிவுகளிலேயே மிகவும் கடினமான முடிவு இதுதான். அடுத்து என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் அறிவித்தார்.
நியூசிலாந்து பிரதமராக ஜான் கே எட்டு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவை எடுக்கச் செய்ததில் அவரது மனைவி ப்ரோனாஹ் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஜானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தேசிய கட்சியின் சிறப்பு கூட்டம் வரும் 12-ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் புதிய பிரதமர் தேர்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள நிலையில் நிதியமைச்சரும், துணை பிரதமருமான பில் இங்கிலீஷ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


