ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவன் அபூபக்கர் அல் பாக்தாதி தலைக்கு 150 கோடி பரிசு: அமெரிக்கா அதிரடி!

உலகின் மோசமான பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தலைவன் அபூபக்கர் அல் பாக்தாதியின் தலைக்கு 150 கோடி பரிசை அமெரிக்கா அறிவித்துள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2016, 10:21 am

DIN

வாஷிங்டன்: உலகின் மோசமான பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தலைவன் அபூபக்கர் அல் பாக்தாதியின் தலைக்கு 150 கோடி பரிசை அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள மோசூல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி உலகளாவிய இஸ்லாமிய பேரரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தலைவனான 

அபூபக்கர் அல் பாக்தாதியின் தலைக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு துவக்கத்தில் ஒரு கோடி டாலர் சன்மானமாக அறிவித்திருந்தது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈராக் படைகள் நடத்திய அதிரடி வான் வழி தாக்குதலில் அபூபக்கர் அல்  பாக்தாதி படுகாயமடைந்ததாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்ததாகவும் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் இதை அதிகாரபூர்வ அறிவிப்பாக ஏற்றுக்கொள்ள அமெரிக்கா  மறுத்து விட்டது. அவன் இன்னும் உயிருடன்தான் உள்ளான் என்று அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது.

இந்நிலையில் அபூபக்கர் அல்  பாக்தாதியின் தலைக்கு இரண்டரை கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 150 கோடி) சன்மானமாக அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு தற்போது அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக சுட்டுக்கொல்லப்பட்ட அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் தலைக்குதான் இவ்வளவு பெரிய தொகை சன்மானமாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.