கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உங்கள் அலைபேசியில் உள்ள புகைப்படங்களை 'வேவு' பார்க்கும் ஐபோனின் 'புகைப்படங்கள் செயலி'!

உங்களது ஐபோனானது iOS 10 இயங்கு செயலி மூலம் மூலம் செயல்படுவதாக இருந்தால் உங்கள் அலைபேசியில் உள்ள புகைப்படங்களனைத்தும் உங்கள் ஐபோனில் 'புகைப்படங்கள் செயலி' மூலம்...

News image
Updated On :28 டிசம்பர் 2016, 7:32 am

நியூயார்க்: உங்களது ஐபோனானது iOS 10 இயங்கு செயலி மூலம் மூலம் செயல்படுவதாக இருந்தால் உங்கள் அலைபேசியில் உள்ள புகைப்படங்களனைத்தும் உங்கள் ஐபோனில் 'புகைப்படங்கள் செயலி' மூலம் உங்களுக்குத் தெரியாமலேயே வேவு பார்க்கப்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக 'பார்ச்சூன்'  இதழில் வெளிவந்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:             

கூகிள் மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டுமே அலைபேசிகளில் சேமிக்கப்படும் புகைப்படங்களில் என்ன உள்ளது என்பதை அறிய  'கம்ப்யூட்டர் விஷன்' என்ற வசதியை பயன்படுத்துகிறது. ஆனால ஆப்பிளை பொருத்தவரை இது மிகவும் சுலபமான ஒன்றாக உள்ளது.

ஆப்பிள் ஐபோனின் 'போட்டோ லைப்ரரி' பகுதியில் உள்ள 'சர்ச்;'வசதியை பயன்படுத்தி நம்மால் குறிப்பிட்ட ஒரு நபரை அல்லது பொருளை எளிதாக தேட முடியும். உதாரணமாக நீங்கள் உங்கள் போனை பயன்படுத்தி புதிதாக ஒரு புகைப்படம் எடுக்கும் பொழுது, போனில் உள்ள 'இமேஜ் சிக்னல் ப்ராசசர்' மூலமாக குறிப்பிட்ட படத்தில் உள்ள நபர்கள் மற்றும் பொருட்களை பிரித்தறிந்து அடையாளம் காண முடியும். மேலும் அவற்றை ஏற்கனவே உள்ள தனது இமேஜ் டேட்டாபேசுடன் ஒப்பிட்டு ஒன்றிணைக்க முடியும்.

இதை உங்கள் போனின் 'போட்டோ லைப்ரரி' பகுதியில் உள்ள 'சர்ச்' உருப்பெருக்கியை தொடர்ந்து அழுத்திக் கொண்டிருப்பதன் மூலம் சோதிக்கலாம். இந்த வசதியை பயன்படுத்தி யாருடைய புகைப்படங்கள் மட்டும் உங்கள் போனில் இடம்பெறலாம் என்பதையும் முடிவு செய்ய முடியும். போனின் பேட்டரியை மிச்சப்படுத்தும் வகையில் இந்த சேவையானது உங்கள் போன் சார்ஜ் ஆகும் போது மட்டுமே செயல்படுமாறு வடிவமைக்கபப்ட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.