பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ரஷ்யா விமான விபத்து: 2 இந்தியர் உள்பட 62 பேர் பலி (விடியோ)

துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரஷ்யாவின் ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :19 மார்ச் 2016, 4:07 pm

துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரஷ்யாவின் ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலியான 62 பயணிகளில் 2 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்ட பட்டியலில், அஞ்சு கதிர்வேல் ஐயப்பன் மற்றும் மோகன் ஷ்யாம் என்ற இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

</p><p align="justify">ரோஸ்டவ்-ஆன் நகரில் உள்ள டான் விமான நிலையத்தில் போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த ஜெட் விமானம், தரையிறங்கும் போது 50-100 மீட்டர் உயரத்தில் இருந்து (164-328 அடி) விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த விமான ஊழியர்கள், பயணிகள் உள்ளிட்ட 62 பேர் உயிரிழந்தனர்.</p><p align="justify">விமானம் முதல் முறையாக தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது.  இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோதும் இதேநிலை நீடித்து, மோசமான வானிலை காரணமாக, ஓடுபாதையைவிட்டு சுமார் 100 அடிதூரம் விலகி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.