கெய்ரோ: எகிப்தில் பயணிகள் விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு தொடர்பில்லை என்று சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாஸியட்ஸ் தெரிவித்துள்ளார்.
எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது.
கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸ் நாட்டின் லார்நக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட விமானத்தில் 55 பயணிகள் உள்ளனர்.
இந்த நிலையில், விமானத்தில் இருந்த ஒரு பயணியே, விமானத்தைக் கடத்திச் சென்றதாகவும், அவருடன் மன வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற சைபீரியாவைச் சேர்ந்த தனது மனைவியை பார்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட எகிப்து பயணிகள் விமானத்தில் சுமார் 55 பேர் இருந்ததாக விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்தது. அதில் இருந்து பெண்கள், குழந்தைகள் என பெரும்பாலான பயணிகளை வெளியேற்ற கடத்தல்காரர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


