சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அமெரிக்க அதிபர் தேர்தல்: 2012ம் ஆண்டு சாதனை முறியடிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில் 2012ம் ஆண்டு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2016, 9:39 am


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில் 2012ம் ஆண்டு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே வாக்களிக்கும் முறையில் இதுவரை 3 கோடியே 5 லட்சம் பேர் வாக்களித்து கடந்த 2012ம் ஆண்டு தேர்தல் சாதனையான 3 கோடியே 2 லட்சம் என்ற சாதனயை முறியடித்துள்ளனர்.

பல மாகாணங்களில் 2012ம் ஆண்டு பதிவான வாக்குகளை விட, இந்த ஆண்டு முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில் ஏராளமானோர் வாக்களித்து விட்டனர் என்று தேர்தல் நிபுணர் மைக்கேல் மெக்டொனால்ட் கூறியுள்ளார்.

2008ம் ஆண்டு அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில் 29.7 சதவீதம் பேர் வாக்களித்த நிலையில், இது 2012ல் 31.6 சதவீதமாக உயர்ந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.