புது தில்லி: உலகப்புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மீண்டும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த உலகின் புகழ் பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா இரண்டு வருடங்களுக்கு முன்பு முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு விற்கப்பட்டது. மேலும் பல்வேறு நாடுகளில் செய்யப்பட்டு வந்த அந்நிறுவனத்தின் அலைபேசி தயாரிப்பு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 'இரண்டு வருடங்களுக்கு போட்டியில்லை' என்ற நோக்கியாவின் ஒப்பந்தம் 2016-உடன் முடிவடைவதைத் தொடர்ந்து இந்நிறுவனம் மீண்டும் அலைபேசி தயாரிப்பில் இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெச் .எம்.டி குளோபல் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் நோக்கியா ஈடுபட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2017-ஆம் ஆண்டில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் 'உலகலாவிய மொபைல் கூட்டமைப்பு' மாநாடு நடக்க உள்ளது.இந்த மாநாட்டில் நோக்கியா நிறுவன தலையை செயல் அதிகாரி ராஜிவ் சூரி உரையாற்ற உள்ளார். எனவே அந்த மாநாட்டில் நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்களை அறிவிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மூன்று புதிய ஆண்டிராய்டு வகை ஸ்மார்ட் போன்களை நோக்கியா அறிமும் செய்யவுள்ளதாகவும்.அவற்றில் ஒரு போனுக்கு நோக்கியா D1C என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


