மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை; உருவாகும் சீர்திருத்த மையங்கள்: இது சீனா ஸ்பெஷல் !

சீன இளைஞர்களிடம் பெருகி வரும் ஆன்லைன் விளையாட்டுகளின் மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர சீன அரசு உத்தேசத்திருக்கிறது.

News image
Updated On :8 அக்டோபர் 2016, 10:15 am

பீஜிங்: சீன இளைஞர்களிடம் பெருகி வரும் ஆன்லைன் விளையாட்டுகளின் மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர சீன அரசு உத்தேசத்திருக்கிறது.

உலகத்திலேயே இணையதளங்களை பயன்படுத்துவோரில் சீனாவின் பங்கு மட்டும் 75 கோடியாகும்.  இவர்களில் 10 முதல் 39 வயதுகுட்டப்பட்டவர்கள் 74 சதவீதம் பேர். 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 20 சதவீதம் பேராக உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இணையதள பொழுதுபோக்கு சேவைகளில் ஆர்வம் செலுத்துகின்றனர். குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகின்றனர். நாடெங்கும் பெருகி வரும் ஆன்லைன் விளையாட்டு மையங்களும் இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளன..

இதனால் கவலை கொண்டுள்ள சீன அரசு, இதனை கட்டுக்குள் கொண்டு வர புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர உத்தேசித்துள்ளது.அதன்படி 18 வயதுக்கு குறைவானவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட தடைவிதிக்கப்பட  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்துடன் நில்லாமல் இதனால் பாதிக்கபப்ட்டுள்ளவர்களை மீட்க அவர்களுக்கு என்று தனி சிகிச்சை மையங்களை அமைக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது.

அத்துடன் சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டு மையங்களில் அடையாள எண்னை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் தொடர்ந்து விளையாடும் நேரத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் அரசு திட்டமிடுகிறது. 

இதுகுறித்தும் அரசு பொது மக்களிடமும் கருத்துக்களை கேட்டு வருகிறது. ஆனால் அரசின் இந்த முயற்சிக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள் தாங்கள் ஆத்திரத்தை சமூக வலைத்தளங்களில் வெளிபடுத்தி வருகின்றனர்.

இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டிலும் அரசு இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.