மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இனி டெஸ்க்டாப்பில் 'சர்ச்' பண்ணாதீங்க! மொபைல்தான் 'டாப்'!

இனி 'கூகிள்' தேடுபொறி இயந்திரத்தை தங்கள் மொபைல் போன் வழியாக பயன்படுத்துபவர்கள், மேசைக்கணினி வழியாக பயன்படுத்துபவர்களை விட, சரியான தகவல்களை பெரும் நிலை உருவாகியிருக்கின்றதது. 

News image
Updated On :18 அக்டோபர் 2016, 12:11 pm

DIN

லாஸ் வேகாஸ்: இனி 'கூகிள்' தேடுபொறி இயந்திரத்தை தங்கள் மொபைல் போன் வழியாக பயன்படுத்துபவர்கள், மேசைக்கணினி வழியாக பயன்படுத்துபவர்களை விட, சரியான தகவல்களை பெரும் நிலை உருவாகியிருக்கின்றதது. 

தற்பொழுது 'கூகிள்' தேடுபொறி இயந்திரத்தை உங்களது மொபைல் போன் அல்லது மேசைக்ககணினி என எது வழியாக பயன்டுபத்தினாலும் ஒரே வகையான தேடல் முடிவுகள் தான் வந்து கொண்டிருந்தன.

ஆனால் இனிமேல் மொபைல் வழியாக பயன்படுத்துபவர்கள்,  மேசைக்ககணினி வழியாக பயன்படுத்துபவர்களை விட மேம்பட்ட முடிவுகளை பெரும் நிலை உருவாகியிருக்கின்றது. கடந்த வருடம் மே  மாதம் கூகிள்  நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கூகிளை மேசைக்கணினி வழியாக பயன்ப்படுத்துபவர்களை விட மொபைல் வழியாக பயபண்படுத்துபவர்களே அதிகம் என்று தெரிய வந்தது.

பெரும்பாலான பழைய இணையதளங்கள்  பயனாளர்கள் தங்கள் மொபைல் போன் வழியாக பார்வையிட ஏதுவாக உருவாக்கப்படவில்லை. எனவே அவற்றை தங்கள் தேடுதல் முடிவுகளில் காட்ட கூகிள் விரும்பவில்லை. எனவே மொபைலில் பார்வையிடுவதற்கு ஏற்ப தங்கள் இணைய தளங்களை மாற்றிக் கொள்ளுமாறு குறிப்பிட்ட நிறுவனங்களை கூகிள் கேட்டுக் கொண்டது.

அதை செயல்படுத்தாவிடில் குறிப்பிட்ட கம்பெனியின் இணைய தள விபரங்கள் மொபைல்போன் வழியாக கூகிள் பயன்படுத்துவோரின் முடிவுகளில் இடம் பெறாது. இதன் மூலம் மேசைக்கணினி வழியாக கூகிளை பயன்படுத்துவோர்,இரண்டாம் தரமாக நடத்தப்படுவது போன்ற நிலை உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.