எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஏமன் சிறை மீது விமான தாக்குதல் நடத்திய அராபிய கூட்டுப்படைகள்: 33 பேர் பலி!

அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் மீது அரேபிய கூட்டுப்படைகள் நடத்திவரும் தாக்குதலின் ஒரு பகுதியாக,  ஏமன் சிறை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 33 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2016, 6:52 am

DIN

சனா: அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் மீது அரேபிய கூட்டுப்படைகள் நடத்திவரும் தாக்குதலின் ஒரு பகுதியாக,  ஏமன் சிறை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 33 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏமன் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக, ஈரான் நட்டு அரசின் ஆதரவுபெற்ற ஹவுத்தி இனப் போராளிகள் புரட்சியிவ் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்தும், அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்காகவும் சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள், ஹவுத்தி இனப் போராளிகள் மீது 2015-ஆம் ஆண்டு  மார்ச் மாதத்தில் இருந்து தொடர் தாக்குதலை  நடத்தி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக ஏமனின் அல்-ஜைதியா மாநிலத்தில் உள்ள ஹொடைடா நகரச் சிறையின் மீது அரேபிய  கூட்டுப்படைகள் நேற்று மாலை விமான தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் 33 பேர் பலியானதாக அங்கிருந்த வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.