
சனா: அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் மீது அரேபிய கூட்டுப்படைகள் நடத்திவரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, ஏமன் சிறை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 33 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏமன் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக, ஈரான் நட்டு அரசின் ஆதரவுபெற்ற ஹவுத்தி இனப் போராளிகள் புரட்சியிவ் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்தும், அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்காகவும் சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள், ஹவுத்தி இனப் போராளிகள் மீது 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக ஏமனின் அல்-ஜைதியா மாநிலத்தில் உள்ள ஹொடைடா நகரச் சிறையின் மீது அரேபிய கூட்டுப்படைகள் நேற்று மாலை விமான தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் 33 பேர் பலியானதாக அங்கிருந்த வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.