கீவ்: ஐபோன்- 7 என்று தன் பெயரை மாற்றிக் கொண்டால், ஐபோன் - 7 ஒன்று இலவசமாக கிடைக்கும் என்பதால், இளைஞர் ஒருவர் தனது பெயரையே மாற்றிக் கொண்ட வினோதம் உக்ரைன் நாட்டில் நடந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய மாடலான ஐ போன் 7-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த போனின் விளம்பரதிற்காக பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உக்ரைன் நாட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையகம் ஒன்று, தனது பெயரை 'ஐ போன் 7' என அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொள்ளும் முதல் ஐந்து நபர்களுக்கு, ஐ போன் 7 இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.
தனக்கு விருப்பமான ஐ போன் 7-ஐ இலவசமாக பெறுவதற்காக, ஒலெக்ஸ்சாண்டர் டுரின் என்ற 20 வயதான உக்ரைன் நாட்டு இளைஞர் ஒருவர், தனது பெயரை அதிகாரப்பூர்வமாக 'ஐ போன் 7' என மாற்ற முன்வந்தார். அதன்படி தன்னுடைய பெயரை ஐபோன் சிம் (உக்ரைன் மொழியில் ஏழு) என்று மாற்றியும் விட்டார்.
அதனைத் தொடர்ந்து அந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையகம் கூறியிருந்தபடி புது ஐ போன் 7 ஒன்றை அந்த இளைஞருக்கு பரிசாக அளித்துள்ளது.
புதிய போனை பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த இளைஞர், ' என் பெயரை தற்காலிகமாக மட்டுமே மாற்றிக் கொண்டுள்ளேன். திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன், மீண்டும் பழைய பெயருக்கு மாறி விடுவேன்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


