மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வாஷிங்டன் வணிக வளாக துப்பாக்கிசூடு சம்பவம்: கொலையாளி பிடிபட்டான்!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பர்லிங்டன் நகரில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில், ஐந்து பேரை சுட்டுக் கொன்ற கொலையாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :25 செப்டம்பர் 2016, 5:50 am

DIN

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பர்லிங்டன் நகரில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில், ஐந்து பேரை சுட்டுக் கொன்ற கொலையாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் கஸாகேட் மால் என்ற பிரபல வணிக வளாகம் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 7.20 மணியளவில், அங்கு புகுந்த  மர்ம நபர் ஒருவன், வளாகத்தின் ஒப்பனைப் பொருட்கள் பிரிவுக்குள் புகுந்து கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளினான்.

இந்த கொடூர தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு  காவல் துறையினர் வருவதற்குள்  கொலையாளி தப்பியோடி விட்டான். இதனிடையே தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.

கொலையாளியை பிடிக்க காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில், வாஷிங்டன் நகர காவல்துறையினரின் ட்விட்டர் பக்கத்தில், 'பர்லிங்டன் நகரில் உள்ள கஸாகேட் மால் வணிக வளாகத்தில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றவனை கைது செய்து விட்டதாக' அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.