

ரியாலிட்டி டிவி ஆளுமை கோலெ கர்தாஷியன் (Khloe Kardashian) கூடைப்பந்தாட்ட வீரரான டிரிஸ்டன் தாம்ஸனைக் காதலித்து வந்தார். சமீபத்தில் அவர் கருத்தரித்த நிலையில், டிரிஸ்டன் கர்தாஷியனுடனான உறவை முறித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார்.
33 வயதான கோலெ கர்தாஷியன் 26 வயது தாம்ஸனை தன்னுடைய ஸோல்மேட்டாகவே நேசித்தார். அவரிடம் இருந்து குழந்தையைத் தவிர வேறு எதையும் தான் எதிர்ப்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
கர்தாஷியன் குடும்பத்தில் இளையவரான கோலெ கர்தாஷியனுக்கு கருத்தரிப்பு சார்ந்த பிரச்னைகள் இருந்து வந்தது. குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைக்கும் மிகவும் ஏங்கியவர் கோலெ கர்தாஷியன். அவரது முன்னாள் கணவர் லாமர் ஓடமுடனான பிரிவுக்குப் பிறகு தனியாக வாழ்ந்துவந்தார். சமீபத்தில் தாம்ஸனுடான உறவு அவருக்கு புது நம்பிக்கையைக் கொடுத்தது. கருத்தரிக்க முயற்சிகளை கடந்த சில வருடங்களாக மேற்கொண்ட கோலெ கர்தாஷியன் 12 வார கர்ப்பமாக இருப்பது உறுதியானது.
தாம்ஸனைப் பொருத்தவரையில் அவர் கோலெ கர்தாஷியனுடனான உறவை இனி தொடர்வதில்லை என்ற முடிவில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.