நியூயார்க்: இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றும் லைவ் வீடியோவில் கூட 20 நொடி விளம்பர இடைவேளை வரும் என்று பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'ரிகோட்' என்ற இதழில் வியாழன் அன்று வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளின் இடையே காட்டப்படும் விளம்பரங்கள் போன்று இனி பேஸ்புக் லைவ் விடியோக்களின் நடுவிலும் விளம்பரங்கள் காட்டப்படும். இந்த சேவையானது முதலில் அமெரிக்காவில் குறிப்பிட்ட ஒரு குழுவினரிடையே பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயானது பயனாளர் மற்றும் பேஸ்புக் நிர்வாகத்திற்கு இடையே முறையே 55:45 என்ற சதவீதத்தில் பிரித்துக் கொள்ளப்படும்.
பேஸ்புக்கில் லைவ் வீடியோ பதிவேற்றம் செய்யும் பயனாளர்களுக்கு வமானம் ஈட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பேஸ்புக் நிர்வாகத்தின் கொள்கை முடிவின் படி வீடியோ துவங்கி 20 நொடிகளுக்கு பிறகுதான் விளம்பரங்கள் தோன்றும் என்றும், இரண்டு விளம்பரங்களுக்கு இடையே குறைந்த பட்சம் 2 நிமிடங்கள் இருக்கும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேஸ்புக் தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'ஒரு பயனாளர் குறைந்த பட்சம் நான்கு நிமிட லைவ் வீடியோ பதிவேற்றம் செய்தால் மட்டுமே விளம்பர இடைவேளைகளை பெற முடியும். அதே நேரத்தில் அவரது வீடியோவுக்கு ஒரே நேரத்தில் 300 பார்வையாளர்களாவது இருக்க வேண்டும்.ஒரு விளம்பர இடைவேளை என்பது 20 நொடிகளை வரை நீடிக்கும்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


