நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக தினந்தோறும் செல்ஃபி எடுத்து வந்த விநோத தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாகதான் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகமான பிறகு 'செல்ஃபி' எனப்படும் 'தற்படம்' எடுக்கும் மோகம் அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக தினமும் ‘செல்பி’ எடுத்து வரும் தகவல் தற்போதுவெளியாகியுள்ளது.
அவரது பெயர் கார்ல் பாடன் (64). அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் வசித்து வருகிறார். அலைபேசிகள் பயன்பாட்டிற்கு வரும் முஇன்னாரே, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் தற்போதையாய் காலத்திற்கு வெகு முன்னரே 1980-ம் ஆண்டுகளின் இறுதியில் இருந்தே கார்ல் ‘செல்பி’ எடுக்கத் தொடங்கினார்.
முதலில் தன்னிடம் இருந்த சாதாரண 35 எம்.எம். கேமராவில் டிரைபோட் மற்றும் சாதாரண வெளிச்சத்தில் செல்பி எடுத்தார்.பின்னர் வேறு விதமான கேமராக்களை பயன்படுத்தத் தொடங்கினார்.
இதுவரை தான் எடுத்த செல்பி புகைப்படங்களை அவர் கண்காட்சியாக வைத்துள்ளார். மேலும் தற்போது ‘பேஸ்புக்‘ இன்ஸ்டனகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.
இருந்த போதிலும் செல்பி மீதான அவரது மோகம் குறையவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் செல்பி எடுப்பேன் என அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


