லாகூர்: உன் கையெழுத்து சரியில்லை என்று கிண்டல் செய்த தனது தங்கையை, பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தானின் 'டான்' செய்தித்தாளில் வெளிவந்துள்ள விபரம் வருமாறு:
கடந்த வெள்ளியன்று ஒன்பது வயது சிறுமி இமான் தன்வீர் லாகூரின் ஷாலிமர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். கழுத்தினை நெரித்து கொல்லப்பட்ட நிலையில் அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது.இது தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரனை நடத்திய போலீசார்,சிறுமியின் சித்தியான சபாவை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.ஆனால் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் தொடர் விசாரணையின் முடிவில் இமானின் சகோதரனான 11 வயது அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டான். இந்த கைது தொடர்பாக காவால் துறை அதிகாரி ஒருவர் அளித்த தகவலில், 'ரம்ஜான் பண்டிகையை கொண்டாட அப்துல் மற்றும் இமான் ஆகிய இருவரும் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர்.
பாட்டி இல்லாத சமயத்தில் இருவரும் சேர்ந்து கையெழுத்து போட்டி ஒன்றினை நடத்தியுள்ளனர். அப்பொழுது ரகுமானின் கையெழுத்து மோசமாக உள்ளதாக. இமான் தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகுமான், அருகிலிருந்த துப்பட்டா ஒன்றினைக் கொண்டு, இமானின் கழுத்தினை நெரித்துக் கொன்றுள்ளான்.பின்னர் விசாரணையின் பொழுது அவன் உண்மையினை ஒப்புக் கொண்டான்' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

ரைபகினா, ஆஸ்டபென்கோ முன்னேற்றம்

ஒரே நபா் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு: தோ்தல் அலுவலரிடம் புகாா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


