ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மாயம்
தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் திடீரென்று காணாமல்


தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் திடீரென்று காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் நகரில் இயங்கிவரும் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை காரில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை கடத்திச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.
அவர்களை உடனடியாக தேடி கண்டுபிடிக்குமாறு பாகிஸ்தான் அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அவர்களை தேடும் பணிக்காக மூன்று சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...