ஹிஸ்புல் தலைவர் சையத் சலாலுதீன் சர்வதேச பயங்கரவாதி: அமெரிக்கா அறிவிப்பு
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத்


வாஷிங்டன்: பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவுதீனை(71) சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து, பின்னணியாக செயல்படும் சையத் சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சிகள் எடுத்து வந்தன.
இந்நிலையில், சலாவுதீன், பல தற்கொலை படையினருக்கு பயிற்சியளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததாலும் இந்த முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளது.
அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. காஷ்மீரில் நிலவும் அசாதரண சூழலுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதமே காரணம் என இந்தியா பல ஆண்டுகளாக கூறிவருவது தற்போது நிருபிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிசுடன் விவாதித்தார். இதைத் தொடர்ந்து, சையத் சலாவுதீனை சர்வதேச பயங்கவாதி என்று அறிவிக்கும் அரசாணையை அமெரிக்கா வெளியிட்டது. இது இந்தியாவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...