வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வருது வருது பேஸ்புக் டி.வி !

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில் தொலைக்காட்சிகளில் வருவதைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

News image
Updated On :4 மார்ச் 2017, 7:31 am

நியூயார்க்: பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில் தொலைக்காட்சிகளில் வருவதைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்னும் இதழில் வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு:

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் முதலில் 'பேஸ்புக் லைவ்' என்னும் பெயரில் பயனாளர்கள் தங்களது வீ டியோக்களை நேரலை ஒளிபரப்பு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது. அதற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது தொலைக்காட்சிகளில் வருவதைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

விளையாட்டு தொடங்கி அறிவியல்  வரையிலான பல்வேறுபட்ட வகைகளில் நிகழ்வுகளை ஒளிபரப்ப   ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவை அனைத்தும் வாரம் ஒருமுறை அரைமணி நேரம் ஒளிபரப்பாகும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. இத்தகைய நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவோருக்கு  கணிசமான அளவில் பணம் தரவும் பேஸ்புக் நிர்வாகம் தயாராக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்னால் பயனாளர்களின் டைம்லைனில் போலிச் செய்திகள் அதிக அளவில் இடம்பெறுவதாக சர்ச்சைகள் எழுந்ததையொட்டி, இந்த புதிய நிகழ்ச்சிகளில் செய்திகள் இடமபெறாது என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.