சிரியா நிவாரண முகாமில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 33 பொதுமக்கள் பலி

சிரியாவில் பொதுமக்கள் நிவாரண முகாமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பள்ளிக் கட்டடத்தில் அமெரிக்கக் கூட்டுப் படை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித
சிரியா நிவாரண முகாமில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 33 பொதுமக்கள் பலி
Published on
Updated on
1 min read

சிரியாவில் பொதுமக்கள் நிவாரண முகாமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பள்ளிக் கட்டடத்தில் அமெரிக்கக் கூட்டுப் படை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் புதன்கிழமை கூறியதாவது:
சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அல்-மன்ஸþரா நகரில் அமெரிக்கக் கூட்டுப் படை விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை குண்டுமழை பொழிந்தன.
வடக்குப் பகுதி மாகாணமான ராக்காவில் அமைந்துள்ள அந்த நகரின் தெற்கே, பள்ளிக் கட்டடம் ஒன்றின் மீதும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அந்தக் கட்டடம், போர் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்களுக்கானநிவாரண முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
அமெரிக்கக் கூட்டுப் படை விமானங்கள் அந்தக் கட்டடத்தின் மீது நிகழ்த்திய தாக்குதலில், அங்கு தங்கியிருந்த 33 பேர் உயிரிழந்தனர்.
ராக்கா, அலெப்போ, ஹாம்ஸ் ஆகிய நகரங்களிலிருந்து அவர்களனைவரும் அந்தக் கட்டடத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றார் அப்தெல் ரஹ்மான்.
இதுவரை 22,600 பேர்!
சிரியாவில் உள்நாட்டுச் சண்டை தொடங்கியதிலிருந்து நடைபெற்று வரும் பல்வேறு விமானத் தாக்குதல்களில், இதுவரை 22,600 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதன் மூலம், எங்கள் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் சக்தியாக பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
- சலாவுதீன் ரப்பானி
ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சர்

எல்லா பிரச்னைகளுக்கும் பிற இனத்தவர்தான் காரணம் என்று பழி போடும் வழக்கத்தை விடுத்து, உலகத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- அன்டோனியோ குட்டெரஸ்
ஐ.நா. பொதுச் செயலர்

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வெறுப்புப் பேச்சை அதிபர் டொனால்ட் டிரம்ப் கைவிட வேண்டும். இனவெறித் தாக்குதல்களுக்கு எதிராக அவர் மிகக் கடுமையாகப் பேச வேண்டும்.
- அமி பேரா
இந்திய வம்சாவளி ஜனநாயகக் கட்சி எம்.பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com