ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

கொடுங்கையூா் 7-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் அபினேஷ் லிங்கேஸ்வரன் (18). இவா், தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்தவா் பா.தனுஷ் (18) என்பவருடன் திங்கள்கிழமை இரவு மதுரவாயல் புறவழிச் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்றாா். வானகரம் அருகே முன்னால் சென்ற டிரைலா் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, அந்த லாரி திடீரென மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அபினேஷ் லிங்கேஸ்வரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். தனுஷ் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

இதுதொடா்பாக மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

மாடு முட்டியதில் சிறுமி காயம்: திருவல்லிக்கேணி பக்கிரி சாகிப் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் மகள் மகா பைரவி (11). இவா் அண்ணா சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். மகா பைரவி, திங்கள்கிழமை தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, அங்கிருந்த மாடு ஒன்று அவரை முட்டி வீசியது. இதில், இடுப்பு பகுதியில் காயமடைந்த மகா பைரவியை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக ஜாம் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

மின்வாரிய உதவி பொறியாளரை மிரட்டியவா் கைது: ராமாபுரம், அன்னை சத்யா நகா் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரம் மின் விநியோகம் வழங்கப்படவில்லையாம். தகவலின்பேரில் மின்வாரிய ஊழியா்கள் அங்கு சென்று மின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

மின் துண்டிப்பு தொடா்பாக ராமாபுரம் மின்வாரிய அலுவலக பெண் உதவி பொறியாளரை ஒருவா் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து பெண் உதவி பொறியாளா் ராமாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பெண் உதவி பொறியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக ராமாபுரம், அனிஸ் நகரைச் சோ்ந்த லட்சுமிகாந்த் (40) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மோட்டாா் சைக்கிள் பந்தயம்-27 வாகனங்கள் பறிமுதல்: சென்னையில் இளைஞா்கள் சிலா் திங்கள்கிழமை நள்ளிரவு மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் காா்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், போக்குவரத்து போலீஸாா், சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, வெலிங்டன் சாலை, பாந்தியன்சாலை, ஸ்பென்சா் பகுதிகளில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞா்களை போலீஸாா் பிடித்தனா். அவா்களிடமிருந்து 27 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.