வாஷிங்க்டன்: சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இருப்பிடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட எக்கச்சக்கமான தகவல்கள் அடங்கிய 4,70,000 புதிய கோப்புகளை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானின் அபோட்டாபாத் என்னும் இடத்தில் பதுங்கியிருந்த பொழுது, 2011-ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவின் 'சீல்' படைப்பிரிவு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அப்பொழுது அவன் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் விடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இத்தனை நாள் சி.ஐ.ஏ வசம் இருந்த இந்த ரகசிய ஆவணங்கள் அனைத்தும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பில் ஒசாமா பின் லேடனின் மகனின் திருமண வீடியோ மற்றும் ஒசாமா பின் லேடன் எழுதிய டைரிகள் கிடைத்ததாக, அவற்றை முன்னமே பார்வையிட்ட ஆராய்ச்சியாளர்கள் தாமஸ் மற்றும் பில் ஆகியோர் தெரிவித்தனர்.
இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்னும் கூர்மையாக அறிந்து கொள்ள உதவும் என்று சி.ஐ.ஏ இயக்குனர் மைக் பொம்பே தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


