பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 4 போலீஸார் பலி
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் கூடுதல் காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட நான்கு போலீஸார் உயிரிழந்தனர்.


பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் கூடுதல் காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட நான்கு போலீஸார் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில், கூடுதல் காவல்துறைத் தலைவர் (தகவல் தொடர்புப் பிரிவு) ஹமீது ஷகீல் சென்று கொண்டிருந்த வாகனம், பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கும்போது, அந்த வாகனத்துக்கு அருகே தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நிகழ்த்தினார்.
இதில் ஷகீலும், இரு அதிகாரிகளும் உயிரிழந்தனர்; 6 போலீஸார் காயமடைந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிப்பக்கப்பட்ட ஒரு அதிகாரி சிசிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-ஏ-தாலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...