தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வியத்நாமில் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 43-ஆக உயர்வு

வியத்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்தது. 21 பேர் பலத்த காயமடைந்தனர். 

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:18 pm

DIN

வியத்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்தது. 21 பேர் பலத்த காயமடைந்தனர். 
மேலும், காணாமல் போன 34 பேரை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 
மழை வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 
16,740 வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மத்திய மற்றும் வடக்கு வியத்நாம் பகுதிகளில் உள்ள ஆறு மாகாணங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கரிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக வியத்நாம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.