உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவரின் இறுதிக் கடிதம்: எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் விடத் திட்டம் தெரியுமா? 

தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கி விபத்துக்குளான உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த பயணி ஒருவர் எழுதிய இறுதிக் கடிதத்தினை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் விட ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவரின் இறுதிக் கடிதம்: எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் விடத் திட்டம் தெரியுமா? 

லண்டன்: தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கி விபத்துக்குளான உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த பயணி ஒருவர் எழுதிய இறுதிக் கடிதத்தினை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் விட ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.

1912-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட டைட்டானிக், அப்பொழுதைய சமயத்தில் உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாகும். மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான இது தனது கன்னி பயணமாக இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. பயணத்தின் நடுவில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின் மீது மோதி விபத்துக்குளாகி இரண்டாக உடைந்து, கடலில் மூழ்கியது.

இந்த கோர விபத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது ஜல சமாதியாகி இறந்த பயணிகளில் அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவரும் ஒருவர். அப்பொழுது இவர் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தில் கப்பலில் பயணம் செய்த பல்வேறு சக பயணிகள் குறித்தெல்லாம்  ஹோல்வர்சன் எழுதி இருக்கிறார். அக்கடிதமானது விபத்தில் உயிர் தப்பிய ஒருவரால் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

பலரிடம் கைமாறிய நிலையில்  தற்பொழுது அக்கடிதம்  நிலையில் இங்கிலாந்தின் வில்ட்சயர் நகரில் ஏலத்துக்கு வந்துள்ளது. இக்கடிதத்தை 80 ஆயிரம் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) ஏலம் விட ஏல நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com