மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

எதிர்ப்புகளுக்கு இடையில் வடகொரியா மீண்டும் ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனை!

உலக நாடுகளின் பலத்த எதிப்புகளுக்கு மத்தியில் வடகொரியா மீண்டும் ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனையை நடத்தி உள்ளது.  

News image
Updated On :3 செப்டம்பர் 2017, 9:48 am

DIN

சியோல்: உலக நாடுகளின் பலத்த எதிப்புகளுக்கு மத்தியில் வடகொரியா மீண்டும் ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனையை நடத்தி உள்ளது.  

கொரிய தீபகற்பத்தில் அண்டை நாடான தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா தனது எல்லையில் அதிக அளவில் படைகளை குவித்து வைத்திருப்பதுடன், அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இதன் காரணமாக அமெரிக்காவும், ஐ.நாவும் வடகொரியா மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் வடகொரியாவின் செயல்பாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்து கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. சமீபத்தில் ஜப்பானிய கடல் பகுதிக்கு மேலாக வடகொரிய ஏவுகணை பறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா மீண்டும் அதிரடியாக ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்து உள்ளது. இது குறித்து, ' இன்று நடத்திய ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை மிகவும் நேர்த்தியான வெற்றியை பெற்றது' என அந்நாட்டு அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை மிக நீண்ட தூர இலக்கை கொண்ட ஏவுகணையுடனும் இணைத்து செயல்படுத்த முடியும் எனவும் அந்நாடு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.