மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கொலம்பியாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் 9 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

News image
Updated On :26 ஜூன் 2017, 5:49 am

கொலம்பியாவில் சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.

கொலம்பியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள குவதாபே மாவட்டத்தில் உள்ள பீநோல் ஏரியில் 170 பயணிகளுடன் சொகுசு படகு ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்தப் படகு ஏரியின் மத்திய பகுதிக்கு சென்ற போது திடீரென மூழ்கத் தொடங்கியது.

இதனால் படகிலிருந்த அனைவரும் செய்வதறியாமல் கூச்சலிட்டனர். தொடர்ந்து படகில் பயணம் செய்த சுற்றுப்பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் சுமார் 150க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.  

இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மாயமான 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

150 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய படகில் 170க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததினால் இந்தப் படகு பாரம் தாங்காமல் மூழ்க்கியிருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.