பிரிட்டனில் நச்சுத் தாக்குதலுக்குள்ளான முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலின் மகள் யூலியா , ரஷியாவிலுள்ள தனது உறவினருடன் தொலைபேசியில் பேசியதாக ரஷிய அரசுத் தொலைக்காட்சி வியாழக்கிழமை தெரிவித்தது.
ரஷியாவைச் சேர்ந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ6-இலும் ரகசியமாக இணைந்த அவர், ரஷிய ராணுவ உளவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி பிரிட்டனுக்கு ரகசியத் தகவல்களை அளித்து வந்தார்.
எனினும், அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்கிரிபாலை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த நிலையில், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட செர்கெய் ஸ்கிரிபால், பிரிட்டனில் வசித்து வருகிறார்.
இந்தச் சூழலில், செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது 33 வயது மகள் யுலியா மீது கடந்த மாதம் 4-ஆம் தேதி நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு, அவர்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று பிரிட்டன் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் ஆகியவை தங்கள் நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டன.
இதனால், ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், ரஷியாவிலுள்ள தனது உறவினர் விக்டோரியாவுடன், நச்சுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த யூலியா ஸ்கிரிபால் தொலைபேசியில் பேசியதாக ரஷிய அரசுத் தொலைக்காட்சி வியாழக்கிழமை தெரிவித்தது.
மேலும், அந்த தொலைபேசி உரையாடலின் ஒலிப் பதிவையும் அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அந்த உரையாடலில், தானும், தனது தந்தையும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவிருப்பதாகவும் யூலியா தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், இந்தத் தகவலை பிரிட்டன் அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 25: தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்று எவ்வளவு?

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

சட்டப்பேரவை மரபை மீறவில்லை! திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனா

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



