சீனாவில் விந்து தானம் செய்ய விரும்புவர்களுக்கு மருத்துவமனையின் புதிய விதிமுறை என்ன?

சீனாவில் விந்து தானம் செய்ய விரும்புவர்களுக்கு மருத்துவமனையின் புதிய விதிமுறை என்ன?
Published on
Updated on
1 min read

அப்பா அம்மாவைத் தவிர சகலத்தையும் இணையத்தில் வாங்கலாம் என்ற நிலை தான் இப்போது நெட்டுலகின் நிஜம். சீனா ஒரு படி முன்னேறி அலிபாபா எனும் இணையதள நிறுவனத்தில் விந்தணுக்களை விற்பனை செய்துவருகிறது.

தற்போது சீனாவில் விந்து தானம் செய்ய விரும்புவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும் என்ற புதிய அறிக்கை வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

பீஜிங் நகரைச் சேர்ந்த பெக்கிங் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மருத்துவமனைதான் உலகின் மிகப் பெரிய விந்து வங்கி. இங்கு ஏப்ரல் 4-ம் தேதி அன்று விந்து தானம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விந்து தானம் செய்பவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து அந்த மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் குறிப்பிடப்பட்ட சில விதிமுறைகளுள் ஒன்று தான் மேற்சொன்னது. அந்த இணையதளத்தில் பகிரப்பட்ட விதிமுறைகள் :

விந்து தானம் செய்வோருக்கு மரபணு நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் நற்சிந்தனைகள் மற்றும் நற்குணங்கள் இருப்பது மிகவும் அவசியம்.

தானம் செய்வோர் 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் தாயகமான சீனாவை நேசிக்க வேண்டும். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஆதரிக்கவும், கட்சியின் கோரிக்கைக்கு விசுவாசமாகவும் இருக்க வேண்டும். 

சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமான குடிமக்களாகவும், அரசியல் பிரச்னைகள் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

விந்து தானம் உடற்தகுதி, ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து இருமுறை மருத்துவப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5500 சீன யுவான் ரொக்கமாக வழங்கப்படும்

இதுபோன்ற விதிமுறைகள் சகஜம் தான். ஆனால் இவற்றில் கம்யூனிஸ சிந்தனைகள் இருக்க வேண்டும், கம்யூனிஸ சிந்தாந்தத்தையும், நிலைப்பாட்டையும், அதன் தலைமையை ஆதரிப்பவர்களாகவும் தானம் செய்வோர் இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை எதிர்த்து மக்கள் கண்டனம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஏப்ரல் 6-ம் தேதியன்று இணையத்திலிருந்த விதிமுறைகள் பக்கத்தில் அதனை நீக்கி விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com