ஆப்கானிஸ்தானில் அரசு காவல் மையத்தில் தாலிபான் தாக்குதல்: 18 வீரர்கள் பலி!
ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் அரசு காவல் மையம் ஒன்றின் மீது தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 18 வீரர்கள் பலியாகினர்.


காபூல்: ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் அரசு காவல் மையம் ஒன்றின் மீது தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 18 வீரர்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் மத்தியில் அமைந்துள்ளது காஸ்னி மாகாணம். இதன் அருகில் உள்ள கௌஜா உமரி மாவட்டத்தில் அரசு காவல் சோதனை மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில் வியாழன் காலை தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அங்கு பணியிலிருந்த 18 பாதுகாப்பு படையினர் மரணமடைந்தனர்.
அத்துடன் அந்த மாவட்டத்தின் ஆளுநர், புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி மற்றும் காவல்துறை துணைத்தலைவர் ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு தலிபான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி வழி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை மாகாண சபை உறுப்பினரான மொஹம்மத் ஆரிப் ரஹ்மானியும் உறுதி செய்துள்ளார். ஆனால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன் பாதுகாப்பு படையினைச் சேர்ந்த எட்டு பேர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும் ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...