ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பொருளாதாரத் தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பதற்கான உத்தரவாதம் இல்லை

ரஷியாவிடமிருந்து "எஸ்-400 டிரையம்ஃப்' ரக ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்ய இருக்கும் விவகாரத்தில், அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பதற்கான

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

வாஷிங்டன்: ரஷியாவிடமிருந்து "எஸ்-400 டிரையம்ஃப்' ரக ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்ய இருக்கும் விவகாரத்தில், அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பதற்கான உத்தரவாதம் இல்லை என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை துணை செயலர் ராண்டல் ஷ்ரிவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
இந்தியா-ரஷியா இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு நீடித்து வருவதை அமெரிக்கா புரிந்து கொள்கிறது. இருந்தபோதிலும், கடந்த கால வரலாற்றைப் பற்றி, அமெரிக்கா இந்தியாவுடன் விவாதிக்க விரும்பவில்லை. இரு நாடுகளுக்கிடையே நிலவ உள்ள வருங்கால உறவைப் பற்றி மட்டுமே இந்தியாவுடன் விவாதிக்க உள்ளோம். இதுவரை ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள கொள்முதல்கள் பற்றி கவலை இல்லை. ஆனால், எதிர்காலத்தில் அந்நாட்டுடன் இந்தியா கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்க முடியாது.
நீடித்த நட்புறவைப் பேணுவதற்கு ரஷியா சிறந்த நாடு இல்லை என்று இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரத் தடையிலிருந்து இந்தியாவுக்கு முழுமையாக விலக்கு அளிப்பது குறித்து அடுத்த வாரம் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ரஷியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்கா, அந்த நாட்டிடம் வர்த்தக உறவுகளை வைத்துக்கொள்ளும் அனைத்து நாடுகளின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்தப் பொருளாதாரத் தடையிலிருந்து, இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மேட்டிஸ் சமீபத்தில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்த நிலையில், பாதுகாப்புத்துறை துணை செயலர் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை, வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.