பாகிஸ்தான் அகதிகளுடன் லிபிய கடற்கரையில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 90 பேர் பலி? 

பாகிஸ்தான் அகதிகளுடன் லிபிய கடற்கரையில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 90 பேர் பலி? 

பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த அகதிகளுடன் லிபிய கடற்கரையில் சென்ற படகு, நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
Published on

திரிபோலி: பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த அகதிகளுடன் லிபிய கடற்கரையில் சென்ற படகு, நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதரமாண அரசியல் சூழ்நிலை காரணமாக அங்கிருந்து மக்கள் அகதிகளாக மேற்கத்திய நாடுகளை நோக்கி செல்வது வழக்கமாகி உள்ளது. இதற்கு அவர்கள் பெரும்பாலும் சட்டவிரோத கடல் பயணங்களை மேற்கோள்கின்றனர். அப்போது அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் கவிழ்ந்து விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வரிசையில் பெரும்பாலும் பாகிஸ்தானைச் சேர்ந்த அகதிகளை ஏற்றிக் கொண்டு மத்தியதரைக் கடலில் லிபியா கடற்பகுதியில் தஞ்சம் நாடிச் சென்றவர்கள் பயணித்த படகு ஒன்று இன்று காலை கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 90 பேரும் பலியாகினர் என அஞ்சப்படுகிறது.

இதுவரையில் லிபியா கடற்பகுதியில் 10 பேரது சடலம் கரை ஒதுங்கி உள்ளது என்றும், எஞ்சியுள்ளோரைத்   தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஐ. நா சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com