தாக்குதலில் தலிபான் துணைத் தலைவர் சாவு
அமெரிக்க ஆளில்லா விமானம் அண்மையில் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் காலித் மெஷூத் கொல்லப்பட்ட தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.


அமெரிக்க ஆளில்லா விமானம் அண்மையில் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் காலித் மெஷூத் கொல்லப்பட்ட தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆஸம் தாரிக் மெஷூத் கூறியதாவது:
வடக்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில், கோர்வாக் என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தலிபான்களின் இரண்டாம் நிலைத் தலைவரான, "சஜ்னா' என்கிற காலித் மெஷூத் உயரிழந்தார்.
அவருக்கு அடுத்த நிலையிலுள்ள முஃப்தி நூர், தலிபான்களின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முஃப்தி நூருக்கு, அமைப்பின் தலைவர் முல்லா ஃபஸ்லுல்லாவின் ஆதரவு உள்ளது என்றார் ஆஸம் தாரிக் மெஷூத்.
ஏற்கெனவே, அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் காலித் மெஷூத் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதி செய்யப்படாத தகவலைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், தங்களது நாட்டின் இறையாண்மையைக் குலைக்கும் செயல் என்று பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...