மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மக்கள் படுகொலையை நிறுத்துங்கள்: சிரியா அரசிடம் ஜெர்மன் அதிபர் வலியுறுத்தல்- தாக்குதல் பலி எண்ணிக்கை 335-ஆக உயர்வு

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் அரசுப் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் வியாழக்கிழமை மேலும் 13 பேர் உயிரிழந்த நிலையில், 'பொதுமக்கள் படுகொலை'யை முடிவுக்குக் கொண்டு

News image
சிரியாவில் கிளர்ச்சியாளர் மீது அந்த நாட்டு அரசு மற்றும் ரஷியா நிகழ்த்தி வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள ரஷிய தூதரகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்ப
Updated On :22 பிப்ரவரி 2018, 11:45 pm

DIN

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் அரசுப் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் வியாழக்கிழமை மேலும் 13 பேர் உயிரிழந்த நிலையில், 'பொதுமக்கள் படுகொலை'யை முடிவுக்குக் கொண்டு வரும்படி ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களைக் கொல்வது, மருத்துவமனகளைத் தாக்கி அழிப்பது என சிரியா படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் படுகொலைக்கு ஒப்பானதாகும்.
அத்தகைய படுகொலை கடும் கண்டனத்துக்குரியது; உடனடியாக நிறுத்தப்பட வேண்டியது என்றார் அவர்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கிழக்கு கெளட்டா பகுதி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
ரஷிய வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள், அல்காய்தா தொடர்பு பயங்கரவாதிகள் வசமுள்ள பகுதிகளில் தாக்குதல் நிகழ்த்தி அந்தப் பகுதிகளை மீட்டு வரும் அதிபர் அல்-அஸாத் தலைமையிலான ராணுவமும், அரசுப் படையினரும், டமாஸ்கஸ் நகரில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கணிசமான பகுதியான கிழக்கு கெளட்டா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விமானத் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன. மேலும், ஹெலிகாப்டர்கள் மூலம் பேரல் குண்டுத் தாக்குதல்களும், ஏவுகணை மற்றும் எறிகணைத் தாக்குல்களும் தீவிரமாக நிகழ்த்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களில் வியாழக்கிழமை மட்டும் 13 பேர் உயிரிழந்ததாகவும், இதன் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 335-ஆக உயர்ந்திருப்பதாகவும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
சிரியா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தவிர, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் போர் நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறாத அல்-காய்தாவுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்தப் பகுதியில் ஒரு சிறு பிரிவில் இயங்கி வருவதைக் காரணம் காட்டி ரஷியா மற்றும் சிரியா படையினர் இந்தப் பகுதியில் தாக்குதல் நிகழ்த்துவதாகக் கூறப்படுகிறது.
4 லட்சம் பேர் வசித்து வரும் கிழக்கு கெளட்டா பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அரசுப் படைகள் முற்றுகையிட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்களின் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அங்கு ரஷியாவும், சிரியா படையினரும் நிகழ்த்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு ஏற்கெனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.