லிமா: பெரு நாட்டில் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலியானார்கள்.
பெருநாட்டில் 50 க்கும்மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று ஒகோனா பகுதியில் உள்ள மனபெரிகனசூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது அங்கு இருந்த ஆபத்தான வளைவு ஒன்றில் திரும்பும் ழுது பேருந்து நிலை தடுமாறி அருகில் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
பள்ளத்தின் அருகில் ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் பேருந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 44 பயணிகள் பலியானார்கள். தகவல் கேட்டு விரைந்து வந்த மீட்பு குழுவினர் ஆற்றில் குதித்து உடல்களை மீட்டு கரை சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் , விபத்து நடந்த பகுதியின் அருகாமையில் ஆறு ஒன்று ஓடுவதால், மேலும் சிலரின் உடல்கள் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 300 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளதால் உடல்களை மீட்கும் பணி கடுமையாக உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


