விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அந்நாட்டு அரசு அனுமதி! 

ராணுவத்தில் இனி பெண்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்று சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2018, 12:54 pm

ரியாத்: ராணுவத்தில் இனி பெண்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்று சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சவுதி அரேபியாவின் நீடித்த வளர்ச்சியினை உறுதி செய்யும் பொருட்டு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் 'சவுதி அரேபியா விஷன் 2030' என்ற தொலைநோக்குத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

அந்த திட்டத்தின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆண்களின் அனுமதி இல்லாமலேயே பெண்கள் தொழில் தொடங்கலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. அடுத்ததாக இவ்வாண்டு ஜனவரியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த தடையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் தற்போது  பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்குவதாக ஞாயிற்றுக்கிழமை அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ரியாத், மக்கா,  அல்-குசைம் மற்றும் அல் மதினா உள்ளிட்ட மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள் ராணுவத்தில் முதல்நிலை வீராங்கனையாக சேர விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி நாட்டின் பொருளாதாரத்தினை விரிவு செய்யும் வகையில், பெண்கள் பொருள் ஈட்டும் வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கித் தரப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.