உலகம் அழிவை நோக்கி நெருங்குகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உலக தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப்போர் உள்ளிட்ட அழிவுப்பாதையை நோக்கி உலகம் பயணிப்பதாக விஞ்ஞானிகள்
உலகம் அழிவை நோக்கி நெருங்குகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Published on
Updated on
1 min read

நியூயார்க்: உலக தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப்போர் உள்ளிட்ட அழிவுப்பாதையை நோக்கி உலகம் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும் (Doomsday Clock) அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகச்சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை அறிவியலாளர்கள் மாற்றியமைத்து வருகின்றனர். 1947-ஆம் ஆண்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழிகாலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டநிலையில், தற்போது 2 நிமிடங்கள் மட்டுமே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டூம்ஸ்டே கடிகாரத்தில் தென்சீனக் கடல் பற்றிய பதட்டங்கள், அணுசக்தி அபாயங்கள், காலநிலை மாற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல், மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

தற்போது நிலவும் வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனை அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டும் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகம் அணுஆயுத போரால் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டூம்ஸ்டே கடிகாரம் 1953 முதல் அமெரிக்காவிற்கு முன்னாள் சோவியத் யூனியனும் ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை பரிசோதித்ததிலிருந்து இதுவரை வெளிப்படையானதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com