காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ பயிற்சி மையம் ஒன்றில் திங்கள் அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவ பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் திங்களன்று அதிகாலை ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் 'திடீர்' தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த 16 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாக்குதல் நடத்திய ஐந்து பயங்கரவாதிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளதாக பின்னர் தகவல்கள் வெளியாகியுள்ளது
இந்த தகவல்களை ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


