பாகிஸ்தானுக்காக இரு செயற்கைக்கோள்களை சீனா திங்கள்கிழமை விண்ணில் செலுத்தியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தனது மார்ச்-2சி ராக்கெட்டை சீனா முதல் முறையாக வர்த்தக ரீதியில் திங்கள்கிழமை விண்ணில் செலுத்தியது.
கடந்த 19 ஆண்டுகளில், சர்வதேச செயற்கைக்கோள்களை சீன ராக்கெட்டுகள் வர்த்தக ரீதியில் சுமந்து சென்று விண்ணில் செலுத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள ஜிவ்குவான் ஏவுகளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மதியம் 11.56 மணிக்கு சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட், பாகிஸ்தானுக்காக பிரஸ்-1 மற்றும் பாக்டெஸ்-1ஏ ஏவுகணைகளை சுமந்து சென்று விண்ணில் செலுத்தியது.
இந்த இரு செயற்கைக்கோள்களில், பிரஸ்-1 என்பது பாகிஸ்தானுக்காக சீனா வடிவமைத்த முதல் ஆப்டிகல்' வகை தொலை உணர்வு செயற்கைக்கோள் ஆகும்.
பாக்டெஸ்-1ஏ ஏவுகணை, பாகிஸ்தானிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 2 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, நல்ல முறையில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு

தீத்தொண்டு நாள் வார விழா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


