புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பஹ்ரைன் பிரதமருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு 

பஹ்ரைன் பிரதமா் காலிஃபா பின் சல்மான் அல் காலிஃபாவை, இந்திய வெளியுறவுத் துறைற அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். 

News image
Updated On :15 ஜூலை 2018, 1:11 pm

தினமணி செய்திச் சேவை

மனாமா: பஹ்ரைன் பிரதமா் காலிஃபா பின் சல்மான் அல் காலிஃபாவை, இந்திய வெளியுறவுத் துறைற அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுகுறித்து, இந்திய வெளியுறறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பஹ்ரைனுக்கு சனிக்கிழமை வந்த அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ், ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு பிரதமரை சந்தித்தாா். அப்போது இந்தியா-பஹ்ரைன் இடையேயான மதிப்பு மிக்க உறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் கலந்தாலோசித்தனா்.

முன்னதாக சுஷ்மா, பஹ்ரைன் வெளியுறறவு அமைச்சா் ஷேக் காலித் பின் அகமது அல் காலிஃபாவை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தாா். அந்த இரு தலைவா்களும் ஏற்கெனவே கடந்த 2015 பிப்ரவரியில் புது தில்லியில் முதல்கட்ட பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், தற்போது இருவரும் 2-ஆம் கட்டமாக பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.

அப்போது, பஹ்ரைனில் குடியேறிய இந்திய சமூகத்தினா் அந்நாட்டு பொருளாதார வளா்ச்சிக்கு அளித்து வரும் பங்களிப்பு குறித்து ஷேக் காலித், சுஷ்மாவிடம் பாராட்டு தெரிவித்தாா். பஹ்ரைனில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுமாா் 3.50 லட்சம் முதல் 4 லட்சம் போ் வரையில் வசிக்கின்றறனா். இந்த எண்ணிக்கை பஹ்ரைன் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும்.

இதனிடையே, மனாமா தேசிய நூலகத்துக்கு ஒரு பெட்டி நிறைய புத்தகங்களை சுஷ்மா அன்பளிப்பாக வழங்கினாா். இந்தியாவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விளக்கும் அந்தப் புத்தகங்கள், பஹ்ரைன் மக்கள் இந்தியாவைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்குவதாக இருக்கும் என்று ரவீஷ் குமாா் அந்தப் பதிவுகளில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.