எச்சரிக்கையாக இருங்கள்; வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: ஈரானை எச்சரித்த ட்ரம்ப் 

எச்சரிக்கையாக இருங்கள், இல்லா விட்டால் வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் அதிபர் ரூஹானிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.
எச்சரிக்கையாக இருங்கள்; வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: ஈரானை எச்சரித்த ட்ரம்ப் 

வாஷிங்டன்: எச்சரிக்கையாக இருங்கள், இல்லா விட்டால் வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் அதிபர் ரூஹானிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா சமீபத்தில் விலகியது. அத்துடன் அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் விதித்து மறைமுக நெருக்கடிகளை விடுத்து வந்தது. அதே நேரம் ஈரான் அதிபர் ரூஹானி, சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் சிங்கத்தின் வாலைச் சீண்ட வேண்டாம் என்றுஅமெரிக்காவைக் கண்டித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் எச்சரிக்கையாக இருங்கள், இல்லா விட்டால் வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் அதிபர் ரூஹானிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஈரான் அதிபர் ருஹானிக்கு: எப்போழுதுமே இன்னொரு முறை அமெரிக்காவை மிரட்டலாம் என்று நினைக்காதீர்கள். இல்லையென்றால் வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அமெரிக்கா இனிமேலும் வன்முறை & மரணம் பற்றிய உங்கள் மோசமான வார்த்தைகளைகே கேட்டுக் கொண்டு இருக்கும் ஒரு நாடு இல்லை. எச்சரிக்கையாக இருங்கள்!

அதிபர் ட்ரம்ப் இந்த வார்த்தைகளை பொதுவாக கோபத்தை எழுத்தில் வெளிக்காட்டும் விதமான ஆங்கில கேப்பிடல் எழுத்துகளில் குறிப்பிட்டு உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com