ஊழல் புகார்: நஜீப் மனைவியிடம் தீவிர விசாரணை

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மீதான ஊழல் புகார் குறித்து அவரது மனைவி ரோஸ்மா மன்úஸாரிடம் (66) ஊழல் தடுப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நஜீப் ரஸாக்குடன் ரோஸ்மா மன்úஸார் (கோப்புப் படம்).
நஜீப் ரஸாக்குடன் ரோஸ்மா மன்úஸார் (கோப்புப் படம்).
Updated on
1 min read

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மீதான ஊழல் புகார் குறித்து அவரது மனைவி ரோஸ்மா மன்úஸாரிடம் (66) ஊழல் தடுப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அவரது வழக்குரைஞர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முந்தைய ஆட்சி காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து, ரோஸ்மா மன்úஸாரிடம் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் சுமார் 3 மணி நேரத்துக்கு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
ரோஸ்மாவின் வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்களையும், அவரது இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் பணம் எங்கிருந்து வந்தன என்பதையும் குறித்து விசாரணை நடத்தியதாக ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2018 மே மாதம் 10-ஆம் தேதி வரை மலேசியாவின் பிரதமராக பொறுப்பு வகித்து வந்த நஜீப் ரஸாக், தனது ஆட்சிக் காலத்தின்போது நாட்டில் தொழில் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்' (1எம்டிபி) என்ற அமைப்பைத் தொடங்கினார்.
அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தையும் அவரே கவனித்து வந்தார். இந்த நிலையில், 1எம்டிபி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 267 கோடி மலேசிய ரிங்கிட் (சுமார் ரூ.4,150 கோடி) பிரதமர் நஜீபின் சொந்த வங்கிக் கணக்குக்கு முறைகேடாக மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்தக் குற்றச்சாட்டை நஜீப் மறுத்தாலும், அவர் பதவி விலகக் கோரி முன்னாள் பிரதமரும், நஜீபின் முன்னாள் அரசியல் சகாவுமான மகாதிர் முகமது உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.
இந்தச் சூழலில், கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜீப் ரஸாக் தலைமையிலான பாரிஸன் நேஷனல் கூட்டணி தோல்வியடைந்தது.
சுதந்திரம் பெற்றது முதல் அந்த நாட்டை தொடர்ந்து 61 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த அந்தக் கூட்டணி, தற்பதுதான் முதல் முறையாக தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தத் தேர்தலில், பகதான் ஹரப்பன் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றியடைந்தது. அதையடுத்து, நஷீதை எதிர்த்து பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது (92) புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், ஊழல் புகார் தொடர்பாக முன்னள் பிரதமர் நஜீப் ரஸாக் இல்லத்தில் போலீஸார் கடந்த மாதம் 16-ஆம் தேதி நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆடம்பரக் கைப்பைகளில், பணம், விலையுயர்ந்த ஆபரணங்கள், கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
அதையடுத்து, புத்ராஜெயா நகரிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் நஜீப் ரஸாக் நேரில் ஆஜராகி, அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்தச் சூழலில், நஜீபின் மனைவியிடமும் இந்த ஊழல் புகார் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com