இன்னும் 3 நாள்களில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் நடக்கவிருக்கிறது.
அணு ஆயுதங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு, ஒரு
வொருக்கொருவர் மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்கும் வரும் செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள்.
சந்திப்பார்களா, மாட்டார்களா, பேச்சுவார்த்தை நடக்குமா, நடக்காதா என்று கடைசி நிமிடம் வரை கலக்கத்தை ஏற்படுத்திய, திடீர் திருப்பங்களைக் கொண்டிருந்த அந்தச் சந்திப்பு, ஒரு வழியாக நடக்கவே போகிறது.
அந்த இருவரும் சந்தித்துக் கொள்வதில் அப்படி என்னதான் முக்கியத்துவம் இருக்கிறது?
இத்தனை களேபரங்களுக்குப் பிறகு டிரம்ப்பும், கிம்மும் சந்தித்துப் பேசி என்ன சாதிக்கப்போகிறார்கள்?
இந்தச் சந்திப்புக்குப் பிறகு வட கொரியாவைப் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாடும், அமெரிக்கா மீதான வட கொரியாவின் பார்வையும் மாறிவிடுமா?
இவைதான் டிரம்ப்-கிம் சந்திப்பு குறித்து கேள்விப்படுவர்களின் மனதில் தோன்றும் வினாக்களாக இருக்கும்.
அணு ஆயுத சோதனைகளைக் கைவிடுவதாகத்தான் கிம் ஜோங்-உன் கூறி வருகிறார். ஆனால், வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது.
இந்த எதிரும் புதிருமான நிலையில், டிரம்ப்புக்காக கிம் ஜோங்கோ, கிம்முக்காக டிரம்போ இறங்கி வரப் போவதில்லை; அதனால் பேச்சுவார்த்தை படுதோல்விதான் அடையும் என்று பலருக்கும் தோன்றும்.
ஆனால், இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் நன்கு கவனிக்க வேண்டும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நாடு வட கொரியா.
அணு ஆயுதம் தயாரிக்கும் அந்த நாட்டின் கனவுதான் அதற்குக் காரணம். அந்தக் கனவை கைவிடாத வரை, வட கொரியாவுடன் எந்த வித சமாதானப் பேச்சுக்கும் அமெரிக்கா முன் வரவில்லை.
இந்தச் சூழலில், சில வாரங்களுக்கு முன்னர் வரை உன் அணுகுண்டு பெரிதா, என் அணுகுண்டு பெரிதா' என்று வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்த கிம் ஜோங்-உன், நேரடி பேச்சுவார்த்தைக்கு அன்பான அழைப்பு விடுத்திருப்பதும், யாரும் எதிர்பாராத வகையில் டொனால்ட் டிரம்ப் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருப்பதும் மாற்றத்துக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.
காரணம், அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இருந்து வரும் பகை அவ்வளவு மோசமானது. அந்தப் பகையை இன்று நேற்று உருவானதல்ல.
அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும்... .. (நாளை)
* கிம் ஜோங்குடனான பேச்சுவார்த்தை நல்லபடியாக இருந்தால், வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுப்பேன்' என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
* டிரம்ப் - கிம் சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ சீனா சென்று, அந்தப் பேச்சுவார்த்தை குறித்து அதிபர் ஷி ஜின்பிங்கிடம் விளக்கமளிக்கவிருக்கிறார்.
* டொனால்ட் டிரம்ப்பை சிங்கப்பூரில் சந்திப்பதற்கு முன்னதாக, தங்கள் நாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் கிம் ஜோங்-உன் விடுவிக்க வேண்டும் என்று வட கொரியாவுக்கான ஐ.நா. கண்காணிப்பாளர் தாமஸ் குவின்டானா வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


