வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ரஷ்ய ராணுவ விமானம் சிரியாவில் விழுந்து விபத்து: 32 பேர் பலி 

ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று சிரியாவில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பலியானார்கள்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:25 pm

DIN

டமாஸ்கஸ்: ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று சிரியாவில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பலியானார்கள்.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு யுத்தத்தில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது.  யுத்த தளவாடங்கள் மற்றும் வீரர்களும் ரஷ்யா சார்பாக சிரிய போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ரஷ்யாவிலிருந்து இன்று யுத்த தளவாடங்கள் மற்றும் வீரர்களுடன் ரஷ்ய விமானப் படை விமானம் ஒன்று சிரியாவில் பறந்து கொண்டிருந்தது. ஜராக்கியா என்ற இடத்தின் அருகிலுள்ள சிரிய விமானப் படை தளத்தினை நோக்கி அது சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 32 பேர் பலியானார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன    

விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.