வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கால்பந்து மைதானம் ஒன்றில் விழுந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவின் திரிபுவன் விமானநிலையத்தில் தரையிறங்கும் போது நிலை தடுமாறி அருகில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து குறித்து நேபாள காவல்துறை செய்தித்தொடர்பாளர் மான்ஜோ நௌபானே தெரிவித்ததாவது:
விமானம் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானதில் உடனடியாக தீ பரவத் தொடங்கியது. மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்குச் சென்ற ஆம்புலன்ஸ் மற்றும் போர்கால மீட்பு நடவடிக்கைக் குழு விரைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த விமானத்தில் மொத்தம் 67 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் விபத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக காத்மாண்டு விமானங்கள் அனைத்தும் அருகிலுள்ள விமானநிலையங்களுக்குச் செல்லவும், இல்லையென்றால் திரும்பச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு மீட்பு நடவடிக்கைகள் முழுமை அடையும் வரை காலவரையின்றி காத்மாண்டு விமானநிலையத்தின் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |

கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் கேகேஆர் என்ன செய்ய வேண்டும்?

உ.பி.யில் பள்ளி அருகே புகைமூட்டம்: 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி!
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


