சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

அமெரிக்க விமான நிலையத்தில் பிரதமருக்கு நேர்ந்த கதி: கொந்தளிக்கும் பாகிஸ்தான்! 

அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸி வழக்கமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் அந்நாட்டிற்கு அவமானத்தினை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2018, 8:01 am

இஸ்லாமாபாத்: அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸி வழக்கமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் அந்நாட்டிற்கு அவமானத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதியிழப்பு செய்யப்பட்ட பின், ஆகஸ்ட் 1 அன்று நாட்டின் 18-வது பிரதமராக ஷாஹித் காக்கன் அப்பாஸி பதவியேற்று கொண்டார்

அவர் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நோய்வாய்ப்பட்ட தனது சகோதரியை  சந்திக்க தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார். எபொழுது நியூயார்க்கில் உள்ள ஜே.எஃப்.கே. சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  விமான நிலையத்தில் அவர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பான காட்சிகளை பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அந்த காட்சிகளில் அப்பாஸி பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு,  தனது பை மற்றும் கோட்  ஆகியவற்றை எடுத்துக்  கொண்டு நடந்து வெளியேறும் காட்சி இடம் பெற்று உள்ளது.

ஆனாலும் அவர் தானாகவே பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினார் என்று ஜியோ நியூஸ் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.