சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பிரான்ஸில் ராணுவத்தினர் மீது கார் தாக்குல் முயற்சி

பிரான்ஸில் ராணுவத்தினர் மீது வியாழக்கிழமை நடைபெற்ற கார் தாக்குதல் முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 7:22 pm

பிரான்ஸில் ராணுவத்தினர் மீது வியாழக்கிழமை நடைபெற்ற கார் தாக்குதல் முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கிரீனோபிள் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த காவலர் குழுவை குறிவைத்து காரை ஓட்டி வந்த மர்மநபர் அவர்கள் மீது மோத முயன்றார். பின்னர் அதிலிருந்து அவர்கள் தப்பித்தனர். காரை ஓட்டி வந்த மர்மநபரிடமிருந்து போலி ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் கைப்பற்றினர். தாக்குதல் நடத்திய மர்மநபர் பிரெஞ்சு மற்றும் அராபிக் மொழிகளில் பேசினார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட இந்த கார் தாக்குதல் பயங்கரவாதிகளின் திட்டமாக இருக்க முடியாது. இருப்பினும், அந்த மர்மநபர் எந்த நோக்கத்துக்காக இந்த தாக்குதலை நிகழ்த்தினார் என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் வணிக வளாகத்தில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் ஒரு காவலர் உள்பட நான்கு பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.